பாஜக கூட்டணி உள்ளதா..? இல்லையா..? முன்னாள் அமைச்சர் சொல்வதென்ன..!!
பாஜக கூட்டணி உள்ளதா..? இல்லையா..? முன்னாள் அமைச்சர் சொல்வதென்ன..!!
சென்னை பட்டினப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “அதிமுக பாஜக கூட்டணி சுமுகமாவே நடைபெற்றது, ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாத சூழல், எங்களை பொறுத்தவரை கட்சி நலன் பாதிக்காத வகையில் மட்டுமே முடிவெடுக்க முடியும், தற்போது கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்பது அவர்களின் முடிவு எனவே இதுகுறித்து பதில் அளிக்க விரும்பவில்லை என்றார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மட்டுமே பாஜக தனித்து போட்டியிடுகிறது கூட்டணி தொடர்கிறது என அண்ணாமலை கருத்துக்கு பதில் அளித்த அவர்,
சட்டமன்றம், நாடாளுமன்றம், ஊரக உள்ளாட்சி தேர்தலில் அவர்களோடு கூட்டணி இருந்தது, தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து சென்று உள்ளனர் எனவே கூட்டணி உள்ளதா இல்லையா என்பது குறித்து கட்சி தலைமை தெரிவிக்கும், கூட்டணி தொடர்கிறது என கூறுவது அண்ணாமலை கருத்து என தெரிவித்தார்.
மேலும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்த அவர், மக்கள் இந்த ஆட்சியில் வேதனையில் உள்ளதாக தெரிவித்த அவர், எங்கள் ஆட்சியின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிப்போம், சாதனை தான் வெற்றி பெரும்” என்றார்.