6 முதல் 12-ம் வகுப்புக்கு தினசரி வகுப்பு நடத்துவதில் மாற்றமா ?- அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்
6 முதல் 12-ம் வகுப்புக்கு தினசரி வகுப்பு நடத்துவதில் மாற்றமா ?- அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்
தமிழ்நாட்டில் ஜனவரி 3-ம் தேதி முதல் 6 - 12-ம் வகுப்புகளுக்கு சுழற்சி முறை ரத்து செய்து வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்றும் அனைத்து கல்லூரிகள், தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களிலும் ஜனவரி 3-ம் தேதி முதல் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும் என தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் தினசரி வகுப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், 6 முதல் 12-ம் வகுப்புக்கு தினசரி வகுப்பு நடத்துவதில் மாற்றமா என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,
“6 முதல் 12-ம் வகுப்புக்கு தினசரி வகுப்பு நடத்துவது பற்றி டிசம்பர் 25-ம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளோம். தமிழ்நாட்டிற்குள் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தினசரி வகுப்பு நடத்துவது பற்றி டிசம்பர் 25-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜனவரி முதல் திருப்புதல் தேர்வுகள் நடக்கும்.” என்று கூறினார்.