சில்லறை தராததால் கொலை!! மதுரையில் பரபரப்பு!!
ரூ.500க்கு சில்லரை இல்லையா?.. சரமாரியாக குத்திக்கொன்ற கும்பல்!!
மதுரையில் ரூ.500-க்கு சில்லறை கொடுக்க மறுத்ததால் நேபாள இளைஞர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் கடந்த 4ம் தேதி அன்று பேருந்து நிலையத்தின் கழிவறை பகுதியில் இளைஞர் ஒருவர் கொடூரமான நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு விசாரணை செய்தனர். இதில் எந்த துப்பும் கிடைக்காததால் போலீசார் திணறினர்.
இதையடுத்து அப்பகுதியில் வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களின் பட்டியலை தயார் செய்து விசாரித்தனர். அதன்படி தொடர் வழிப்பறியில் ஈடுபடும் சூர்யா மற்றும் ஜெயசூர்யா ஆகிய இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் இளைஞரை இருவரும் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கொலை செய்யப்பட்ட இளைஞரிடம் 500 ரூபாய்க்கு சில்லறை கேட்டதாகவும் அவர் சில்லறை தர மறுத்ததால் கொலை செய்ததாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட இளைஞர் நேபாளத்தை சேர்ந்தவர் என்றும், அவர் வேலை தேடி தமிழகம் வந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in