அரையாண்டு தேர்வு விடுமுறை கிடையாதா ? அதிர்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் !

அரையாண்டு தேர்வு விடுமுறை கிடையாதா ? அதிர்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் !

Update: 2021-12-21 17:35 GMT

நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு விடுமுறை கிடையாது என்ற தகவல் வெளியாகியுள்ளளதால் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா சூழல் காரணமாக பள்ளிகள் முழுமையாக செயல்படாமல் இருந்து வந்தது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் சுழற்சி முறையில் படிப்படியாக அனைத்து வகுப்புகளும் துவங்கப்பட்டன. திங்கள் முதல் சனி வரை ஆறு நாட்களுக்கு பள்ளிகள் வேலைநாட்களாக செயல்பட்டு வருகின்றன. 

எனினும் அவ்வபோது ஒரிரு மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வந்தாலும் பெரியளவில் பரவல் ஏற்படவில்லை. இதனால் ஜனவரி முதல் சுழற்சி முறை ரத்து செய்யப்பட்டு, அனைத்து வகுப்புகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சுமார் இரண்டு ஆண்டுகளாக வீட்டில் இருந்த மாணவர்கள் கடந்த செப்டம்பர் முதல் தொடர்ந்து வாரத்துக்கு ஆறு நாள்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். 

இதனால் அரையாண்டு விடுமுறைக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் காத்திருந்தனர் என தெரிகிறது. வழக்கமாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையுடன் இணைந்து, 10 நாள் வரை அரையாண்டு தேர்வு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. 

ஆனால், நடப்பு கல்வியாண்டில் டிசம்பர் 20ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் திருப்புதல் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சனிக்கிழமைகளில் வருவதால் அன்று மட்டும் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர். அரையாண்டு தேர்வு விடுமுறை இல்லை என பரவும் தகவலால் பள்ளி மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

newstm.in
 

Similar News