எம்.எல்.ஏ மகனுக்கே இப்படி ஒரு நிலையா?
எம்.எல்.ஏ மகனுக்கே இப்படி ஒரு நிலையா?
காரைக்கால் முன்னாள் எம்எல்ஏ பஞ்சவர்ணத்தின் மகன் வெற்றிச் செல்வன் கும்பகோணம் ரயில் நிலையம் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியை சேர்ந்த திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பஞ்சவர்ணத்தின் மகன் வெற்றி செல்வனுக்கு (42) ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஹன்சிகா (6) என்ற மகளும் உள்ளனர். வெற்றிச் செல்வன் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தனது காரில் வீட்டை விட்டு வெளியே சென்ற வெற்றிச் செல்வன் திரும்பி வரவில்லை. அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல இடங்களில் தேடினர். எங்கும் கிடைக்காததால் ராஜேஸ்வரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் கும்பகோணம் ரயில் நிலையம் அருகே உள்ள லெவல் கிராசிங்கில் ஒரு கார் வெகுநேரமாக நின்று கொண்டிருப்பதாகவும், அதில் ஒருவர் மயங்கிக் கிடப்பதாகவும் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த நபர் இறந்து கிடந்ததை அறிந்து அவரது செல்போனை ஆய்வு செய்தனர். அதன் மூலம் இறந்து கிடந்தவர் கோட்டுச்சேரி திமுக முன்னாள் எம் எல் ஏல் மகன் வெற்றிச் செல்வன் என்பது தெரிய வந்தது.
கும்பகோணம் மேற்கு காவல்நிலைய அதிகாரிகள் வெற்றிச்செல்வனின் உடலை கும்பகோணம் மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். வெற்றிச் செல்வன் மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆன்லைன் ரம்மி விளையாடி தோற்றதால் மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
newstm.in