ராகவா லாரன்ஸா இது ? மிரட்டலான லுக்... திகில் தெறிக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ராகவா லாரன்ஸா இது ? மிரட்டலான லுக்... திகில் தெறிக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Update: 2021-08-07 04:55 GMT

ராகவா லாரன்ஸ் இந்தியில் காஞ்சனா படத்தின் ரீமேக்காக அக்‌ஷய்குமாரை வைத்து இயக்கிய லட்சுமி படம் சமீபத்தில் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. அடுத்து சந்திரமுகி 2 படத்தில் நடிப்பதாக இருந்தது, பட்ஜெட் காரணங்களால் அந்த படத்தை இன்னும் தொடங்கவில்லை.

இந்த நிலையில், 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ருத்ரன்’. இந்த படத்தில் முதல் முறையாக நடிகை ப்ரியா பவானி ஷங்கர் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

திருமாறன் கதை, திரைக்கதை எழுத ‘ருத்ரன்’ படத்தை கதிரேசன் இயக்குகிறார். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ராஜசேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். மேலும் இந்த படத்தில், நாசர், பூர்ணிமா ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

இந்நிலையில், ராகவா லாரன்ஸ் தனது புதிய படத்தின் தலைப்பை அறிவித்துள்ளார். இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்களின் விவரம் விரையில் வெளியாகும்.


 

Tags:    

Similar News