ஒரு எம்எல்ஏ செய்ற வேலையா இது...!!

ஒரு எம்எல்ஏ செய்ற வேலையா இது...!!

Update: 2021-07-03 14:52 GMT

கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக, பல்வேறு கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகளுடன் சொகுசு விடுதிகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குஜராத் மாநிலத்தின் பஞ்ச்மஹால் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சொகுசு விடுதியில் விதிகளை மீறி மதுவிருந்து மற்றும் சூதாட்டம் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், திடீர் சோதனை நடத்தினர். இதில், இளம்பெண்களுடன் மதுவிருந்து ஒருபுறமும், சூதாட்டம்  மற்றொரு புறமும் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. 

அனைவரையும் சுற்றி வளைத்த காவல்துறையினர் 7 பெண்கள் உட்பட 25 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் ரொக்கம், 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், மதுவிருந்துடன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் பாஜக எம்எல்ஏ கேசரிசின் சோலங்கி என்பது தெரியவந்தது. இவர், குஜராத் மாநிலம் கெடா மாவட்டத்தில் உள்ள மாடர் சட்டசபை தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News