அரசியலில் ஈடுபடுகிறாரா வைகோவின் மகன் ?

அரசியலில் ஈடுபடுகிறாரா வைகோவின் மகன் ?;

Update: 2021-08-23 05:15 GMT

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் மதிமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தூரப்பாண்டியனுக்கும், சுபஸ்ரீக்கும் திருமணம் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக துரை வைகோ கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

அப்போது அவர் பேசியதாவது,

எனக்கு அரசியலில் அதிக நாட்டம் இல்லை. என் தந்தை வைகோ வெளியில் வர முடியாத சூழலில், தொண்டர்களின் உணர்வை மதித்து, அவர்களது இல்ல நிகழ்வுகளில் மட்டுமே கலந்து கொண்டு இருந்தேன்.

ஆனால் இன்றைய சூழலில், சமுதாய பணியில் என்னை நான் முழுமையாக அர்ப்பணித்து கொண்டேன். துரை வையாபுரி என்ற முதல் அத்தியாயம் நேற்றுடன் முடிந்துவிட்டது. இன்று முதல் துரை வைகோ என்ற புதிய அத்தியாயத்தை தொடங்கி, அரசியலில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்கிறேன்.

Tags:    

Similar News