இன்று முதல் 7 நாட்கள் தனிமை கட்டாயமாக்கப்பட்டுள்ளது..!!

இன்று முதல் 7 நாட்கள் தனிமை கட்டாயமாக்கப்பட்டுள்ளது..!!

Update: 2021-12-26 05:40 GMT

இந்தியாவில் தற்போதய நிலவரப்படி ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டிலும் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறையின் உயர்மட்ட குழு வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளை கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மக்கள் கொண்டாட வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர்,

“இன்று முதல் அனைத்து வெளிநாடுகளில் இருந்தும் வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எட்டாவது நாள் கொரோனா பாதிப்பு இல்லை என்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்தால் அவர்கள் அனுப்பப்படுவர்.

புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளை கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மக்கள் கொண்டாட வேண்டும்.நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை கூட்டமாக கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும். வெளிமாநிலங்களுக்கு சென்றும் புத்தாண்டு கொண்டாடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். ஒமைக்ரான் வேகமாக பரவுவதால் புத்தாண்டை மக்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதித்த 34 பேரில் 12 பேர் குணமடைந்துள்ளனர். இருந்தபோதும் வெளிநாடுகளில் இருந்து வந்த 39 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவர்களின் மாதிரிகள் அடுத்தக்கட்ட பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 5 நாட்களில் பரிசோதனை முடிவு தெரிய வரும். நாளை 16 வது கொரோனா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளது.

இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ளதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே, இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளாதவர்கள் நாளை நடைபெறும் முகாமை பயன்படுத்தி  தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

Similar News