ஒரு பைசா கூட எடுக்கலை... அலறும் துக்ளக் குருமூர்த்தி!

இந்நிலையில், துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் குருமூர்த்தி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், "1988ம் ஆண்டில் ராம்நாத் கோயங்கா, ஆனந்த விகடன் குழுமத்திலிருந்து துக்ளக்கை வாங்கி நடத்துமாறு யோசனை கூறினார். அதன்படி, பாலசுப்ரமணியத்திடமிருந்து துக்ளக்கை வாங்கி எனது மனைவியை பார்ட்னர் ஆக்கினார். சோ ஆசிரியராக இருந்தார்.

Update: 2020-01-25 00:43 GMT

துக்ளக் பத்திரிகை குருமூர்த்தி கட்டுப்பாட்டிற்கு எப்படி வந்தது என்ற சர்ச்சைக்கு குருமூர்த்தி நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.

துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயடு கலந்துகொண்டு 50வது ஆண்டு விழா மலரை வெளியிட்டார். மேலும், இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரஜினிகாந்த், பெரியார் குறித்து சர்சசையாக பேசியது அரசியல் வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அத்துடன், துக்ளக் பத்திரிகை குருமூர்த்தி கட்டுப்பாட்டிற்கு எப்படி வந்தது என பலர் கேள்வி எழுப்பத் தொடங்கினர். பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமியும் துக்ளக் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இந்நிலையில், துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் குருமூர்த்தி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், "1988ம் ஆண்டில் ராம்நாத் கோயங்கா, ஆனந்த விகடன் குழுமத்திலிருந்து துக்ளக்கை வாங்கி நடத்துமாறு யோசனை கூறினார். அதன்படி, பாலசுப்ரமணியத்திடமிருந்து துக்ளக்கை வாங்கி எனது மனைவியை பார்ட்னர் ஆக்கினார். சோ ஆசிரியராக இருந்தார். என் மனைவியுடன் தொடர்ந்து பங்குதாரராக இருக்க நான் தயங்கினேன்; துக்ளக்கிற்கு எனது பங்களிப்பு குறைவாக இருந்ததால், என் மனைவி 1991ம் ஆண்டு  நிறுவனத்திலிருந்து விலகினார். அதன் பிறகு சோ, என்னை தமிழில் எழுத தூண்டி, தமிழ் பத்திரிகை துறைக்கு அறிமுகப்படுத்தினார். நான் துக்ளக் அணியில் நுழைந்தேன்; சோவும் நானும் பல்வேறு அரசியல் உத்திகளில் பணியாற்றினோம். 2007ம் ஆண்டில் நான் அவரது வாரிசாக வேண்டும் என்று சோ வலியுறுத்தத் தொடங்கினார். அப்போது, அவருக்குப் பிறகு யாரும் பத்திரிகையை வாங்க மாட்டார்கள் அதனால், அதை மூடுவது நல்லது என்றேன்.

ஆனால், அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். கடைசியாக நான் அவருடைய வாரிசாக இருக்க விரும்பவில்லை என்றாலும், நான் அப்போது துக்ளக்கிற்குச் சொந்தமான நாச்சிகெட்டாஸ் பப்ளிகேஷன்ஸ் பி லிமிடெட் நிறுவனத்தின் 50 சதவீத பங்குதாரராக வேண்டி இருந்தது. 2008ம் ஆண்டில் நான் NPPL ன் 50% மூலதனத்தை சோவுடன் முதலீடு செய்தேன். இதனால், நான் அவருக்குப் பின்னால் வருவேன் என்று சோ சுட்டிக்காட்டத் தொடங்கினார். 2013ம் ஆண்டில் அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், நான் துக்ளக்கை கையகப்படுத்த மாட்டேன் என்பதை உணர்த்த அனைத்து பங்குகளையும் சோவுக்கு மாற்றினேன். ஆனால், துக்ளக்கை நான் பொறுப்பேற்க ரஜினி உட்பட பலருடன் கூறியுள்ளார்.   

சோ இறக்கும் வரை நான் அவரிடம் சரி என்று ஒருபோதும் சொல்லவில்லை. சோ, தகனம் செய்யப்பட்ட மறுநாளே, துக்ளக் அச்சிடும் குமுதத்தின் வரதராஜனுடன் முழு துக்ளக் குழுவும் என்னைச் சந்தித்தனர்; நான் ஒப்புக் கொள்ளாவிட்டால் துக்ளக்கை மெதுவாக மூடுவதாகவும் கூறினார். அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றங்களைக் கண்டதால் துக்ளக்கை பொறுப்பேற்க முடிவு செய்தேன். நான் எழுதத் தொடங்கிய போது 1986ம் ஆண்டு ஒரு சபதம் எடுத்தேன்; எழுதுவதற்கு ஒரு ரூபாய் எடுக்க மாட்டேன். இன்று நான் எனது நேரத்தின் 50% துக்ளக்கிற்கு ஒதுக்குகிறேன்; ஆனால், அதிலிருந்து ஒரு பைசா எடுக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

newstm.in

Tags:    

Similar News