இன்று இந்த மாவட்டங்களில் மழை கொட்டும்.. வானிலை மையம் எச்சரிக்கை !!

இன்று இந்த மாவட்டங்களில் மழை கொட்டும்.. வானிலை மையம் எச்சரிக்கை !!

Update: 2022-01-27 10:35 GMT

தமிழகத்தில் கடும் பனிப்பொழிவு நிலவிவரும் நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் இன்று (ஜன. 27) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஜன.27ஆம் தேதி (இன்று) கடலோர மாவட்டங்கள், புதுவை,காரைக்கால் மற்றும் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர். திருச்சி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

28ஆம் (நாளை) தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். 

29, 30ஆம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Similar News