சாகும் வரை ஜெயில் தான்! சிறுமி வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
சாகும் வரை ஜெயில் தான்! சிறுமி வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
சென்னையில், 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அயனாவரத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்த 11 வயது சிறுமியை, அதே குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக பணியாற்றியவர் உள்ளிட்டோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
இந்த வழக்கில், போலீசாரின் விசாரணையில், அடுக்குமாடி குடியிருப்பின் லிப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் உட்பட அவரது நண்பர்கள் சுரேஷ், ராஜசேகர், எரால்பிராஸ், அபிஷேக், சுகுமாரன், முருகேசன், பரமசிவம், ஜெய்கணேஷ், பாபு, பழனி, தீனதயாளன், ராஜா, சூர்யா, குணசேகரன், ஜெயராமன், உமாபதி என அதிரடியாக சிறுமியை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கியதாக 17 பேரை கடந்த 2018ம் ஆண்டு சிக்கினார்கள்.
இவர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார், இவர்கள் மீது போக்சோ சட்டம், பாலியல் வன்கொடுமை, காயம் ஏற்படுத்துதல், கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கைதான 17 பேருக்கும் ஜாமீன் வழங்கப்படாததால் தொடர்ந்து கடந்த ஒன்றரை வருடமாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 17 பேரில் பாபு என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். மீதமுள்ள 16 பேரில், குற்றம் சாட்டப்பட்ட தோட்டக்காரர் குணசேகரன் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். மற்ற 15 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
newstm.in