உலக அளவில் மீண்டும் ஒரு சாதனைப் படைத்த ஜெய் பீம்!!
உலக அளவில் மீண்டும் ஒரு சாதனைப் படைத்த ஜெய் பீம்!!
கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய திரைப்படங்களின் பட்டியலில் சூர்யாவின் நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது.
நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பெரும் சர்ச்சைக்கு இடையே ஜெய் பீம் திரைப்படம் அமோக வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில், பிரபல தேடு பொறியான கூகுளில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் ஜெய் பீம் முதலிடம் பிடித்துள்ளது.
ஏற்கனவே ஐஎம்டிபி ரேட்டிங்கில் ஜெய்பீம் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் மேலும் ஒரு சாதனையை படைத்த பெருமையை பெற்றுள்ளது ஜெய் பீம்.
2ஆம் இடத்தை இயக்குநர் விஷ்ணுவர்த்தன் இயக்கிய ஷெர்ஷா திரைப்படமும், பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதா திரைப்படம் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
newstm.in