அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெப் பெசோஸ் பதவி விலகியதை தொடர்ந்து ஆண்டி ஜாஸே நியமிக்கப்பட்டுள்ளார்.

1994-ம் ஆண்டு மிகவும் எளிமையான முறையில் தொடங்கப்பட்டது அமேசான் நிறுவனம். ஆனால் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, மிகவும் பிரபலமான நிறுவனமாகவும் காணப்படுகிறது. உலகின் பெரும் கோடீஸ்வரராக உயர்ந்த அந்நிறுவனத்தின் செயல் தலைமை அதிகாரியாக இருந்த ஜெஃப் பிஸோஸின் நிகர சொத்து மதிப்பு 20,000 கோடி டாலர் ஆகும்.  

இணையதளம் மூலம் 1994ஆம் ஆண்டு புத்தக விற்பனையை தொடங்கிய ஜெஃப் பெசோஸ், தற்போது தொலைக்காட்சி, கணினி என அனைத்து பொருள்களையும் இணையதளத்தில் விற்பனை செய்யும் நிறுவனமாக அமேசானை உருவாக்கியுள்ளார். அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து ஜெப் பெசோஸ் பதவி விலகினார். இந்த நிலையில் உடனடியாக அந்நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஆண்டி ஜாஸே நியமிக்கப்பட்டுள்ளார்.

அமேசானின் இணையவழிச் சேவைகளுக்கு பொறுப்பாளராக இருந்த ஆண்டி ஜாஸே-வை  ஜெஃப் பெசோஸ்  நியமித்துள்ளார். 57 வயதாகும் ஜெப் பெசோஸ் இனி தனது செயற்கைகோள் தயாரிக்கும் நிறுவனமான புளூ ஒரிஜனில் கவனம் செலுத்த உள்ளார்.

newstm.in
 

Tags: