JIO அதிரடி ஆஃபர்!!!

தற்போது, ஜியோ வாடிக்கையாளர்கள் 10 ரூபாய்க்கு டாப்-அப் செய்தால், 1 ஜிபி இலவச டேட்டவை வழங்கி, மகிழ்விக்கிறது. ஜீயோ வாடிக்கையாளர்களுக்கு, பிற நெட்வொர்க்குகளை அழைப்பதற்காக நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கத் துவங்கியது, பயனர்களை அதிருப்தியடைய செய்த நிலையில், ஜியோ வழங்கும் இந்த புதிய ஆஃபர்கள் அவர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Update: 2020-01-22 20:35 GMT

வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப் போட்டு வழங்கி வருகின்றன. ஒரு நிறுவனம் ரீ சார்ஜ் கட்டணங்களை உயர்த்தினால், போட்டி போட்டுக் கொண்டு அனைத்து நிறுவனங்களும் கட்டணங்களை உயர்த்துகின்றன. இந்நிலையில், அதிரடி ஆஃபர்களை அவ்வப்போது வழங்கி, தன் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் மூழ்க செய்துள்ளது ஜியோ.

                                                 

நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஆண்டு தனது ப்ரீபெய்ட் திட்டத்தில் பல மாற்றங்களைச் செய்தது. தற்போது, ஜியோ வாடிக்கையாளர்கள் 10 ரூபாய்க்கு டாப்-அப் செய்தால், 1 ஜிபி இலவச டேட்டவை வழங்கி, மகிழ்விக்கிறது. 
ஜீயோ வாடிக்கையாளர்களுக்கு, பிற நெட்வொர்க்குகளை அழைப்பதற்காக நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கத் துவங்கியது, பயனர்களை அதிருப்தியடைய செய்த நிலையில், ஜியோ வழங்கும் இந்த புதிய ஆஃபர்கள் அவர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

                                                 

உதாரணமாக , 28 நாட்கள் வேலிடிட்டியுடன் ஜியோவின் ரூ 199 திட்டத்தில், ஜியோவிலிருந்து ஜியோ நெட்வொர்க்கிற்கு எத்தனை அழைப்புகளை வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம். பிற நெட்வொர்க்குகளுக்கு 1,000 ஜியோ அல்லாத நிமிடங்கள் கிடைக்கின்றன. இந்த 1000 நிமிடங்கள் முடிவுற்றவுடன், வாடிக்கையாளர்கள் ரூ10 முதல் ரூ1000 வரையில் எந்த டாப்-அப்பையும் மீண்டும் ரீசார்ஜ் செய்துக் கொள்ளலாம். 10 ரூபாய் ரீசார்ஜ் செய்வது 124 பிற நெட்வொர்க்குகளுக்கான நிமிடங்களை வழங்குகிறது. மேலும், இவை தவிர, ஒவ்வொரு முறை ரூ10 டாப்-அப் செய்யும் போதும் இலவசமாக 1 ஜிபி டேட்டாவையும் ஜியோ வழங்குகிறது.20 ரூபாய் ரீசார்ஜில் 2 ஜிபி, 50 ரூபாய் ரீசார்ஜில் 5 ஜிபி மற்றும் 100 ரூபாய் ரீசார்ஜில் 10 ஜிபி டேட்டா வழங்கப்படும்.

newstm.in

Tags:    

Similar News