’ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு பீச்சில் நடனம்.. சமந்தாவுக்கு டப் கொடுக்கும் ஜூலி- வீடியோ !

’ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு பீச்சில் நடனம்.. சமந்தாவுக்கு டப் கொடுக்கும் ஜூலி- வீடியோ !

Update: 2021-12-20 19:15 GMT

தமிழக இளைஞர்களுக்கு புரட்சி பெண்ணாக அறிமுகமாகி தற்போது கவர்ச்சி கன்னியாக மாறி வருகிறார் நடிகை ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான ஜூலி, அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகினார். இதில் அவருக்கு ரசிகர்கள் உயர்ந்தாலும் எதிர்ப்பும் எழுந்தது. எனினும் எதையும் கண்டுக்கொள்ளாமல் இருந்த அவருக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பும் கிட்டியது. தற்போது சமூக வலைதளத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜூலி, போட்டோ ஷூட்டில் பிஸியாக இருந்து வருகிறார்.

அவ்வப்போது, புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அண்மையில் ஜூலிக்கும் அவரது காதலனுக்கு பஞ்சாயத்து நடந்தனது. அதாவது, 2.50 லட்சம் ரூபாய்க்கு வீட்டிற்கு தேவையான பொருட்களை தனது காதலனுக்கு வாங்கி கொடுத்ததாக ஜூலி தெரிவிந்திருந்தார். இது தொடர்பாக ஜூலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து ஜூலியின் காதலன் தாமாகவே முன்வந்து ஜூலி வாங்கி கொடுத்த தங்க நகை உள்ளிட்ட பொருட்களை போலீசார் முன்னிலையில் திருப்பியளித்துள்ளார். விசாரணையில் ஜூலி தான் முதலில் காதலை துண்டித்துள்ளார் என்பது அம்பலமாகியது. இந்த கதை வேறு.

தற்போது ஜூலி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். புஷ்பா படத்தில் சமந்தா நடனமாடியுள்ள ‘ ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனமாடியுள்ளார். ஜூலியின் இந்த ஆட்டம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சும்மா சமந்தாவுக்கே டப் கொடுக்கும் அளவுக்கு இருப்பதாக பலரும் கலாய்த்து வருகின்றனர். 

newstm.in


 

Tags:    

Similar News