கபடி போட்டியில் வெற்றி.. ஆத்திரத்தில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை..!

கபடி போட்டியில் வெற்றி.. ஆத்திரத்தில் இளைஞர் கொலை..!

Update: 2020-01-19 12:11 GMT

பொங்கல் விழாவில் வெளியூர் வீரர்களை வைத்து கபடி விளையாடிய இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கோவை அம்மன்குளம் தாமு நகர் அருகே பொங்கல் விழாவை முன்னிட்டு கபடி போட்டிகள் நடைபெற்றன.  இந்தப் போட்டியில் அதே பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் என்ற இளைஞர், 3 வெளியூர் கபடி வீரர்களை தனது அணியில் சேர்த்து விளையாடி போட்டியில் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சென்று, வெளியூர் வீரர்களை வைத்து விளையாடியது தொடர்பாக நவீன்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த விஜயகுமார், மறைத்து வைத்திருந்த கத்தியால் நவீனை குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நவீன்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டநவீன்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்துள்ளனர். மேலும், இருவரை தேடி வருகின்றனர். விளையாட்டு போட்டி விவகாரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

Tags:    

Similar News