காபூல் விமான நிலையம் மூடல்.. துப்பாக்கிச்சூடு: இந்தியர்களை மீட்பத்தில் சிக்கல் !!
காபூல் விமான நிலையம் மூடல்.. துப்பாக்கிச்சூடு: இந்தியர்களை மீட்பத்தில் சிக்கல் !!
காபூல் விமான நிலையம் மூடப்பட்டதால் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை மீட்பதில் சிக்கல் எழுந்துளது.
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக இருந்த அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின் லேடனுக்கு அடைக்கலம் அளித்த குற்றத்துக்காக தலீபான்களுக்கு எதிராக அமெரிக்கா தனது ராணுவ படைகளை 2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது.
அமெரிக்க படைகளின் உதவியுடன் ஆப்கானிஸ்தான் அரசு தலீபான்களிடம் இருந்து நாட்டை முழுமையாக மீட்டது. தலீபான்கள் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்கள் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. தலீபான்களை முழுமையாக ஒழித்து கட்ட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருந்ததால் தனது படைகளை அங்கேயே நிறுத்தி வைத்தது. ஆனால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகியும் அமெரிக்க படைகளால் தலீபான்களை முழுமையாக ஒழிக்க முடியவில்லை.
எனவே முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்லும் இந்த போரில் இருந்து விலக அமெரிக்கா முடிவு செய்தது. இதனையடுத்து தலீபான் அமைப்பு ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்தது. புயல் வேகத்தில் புகுந்த தலீபான்கள் அடுத்தடுத்து நாட்களில் நகரங்களை பிடித்து இறுதியாக ஆட்சியையும் பிடித்துவிட்டனர்.
இதனால் ஆப்கன் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக அந்நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டு மக்கள் பலர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். விமானத்தில் முண்டியடித்து ஏற முயன்றனர். விமான நிலையத்தில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டடனர்.
மக்கள் கூட்டம் அலைமோதியதையடுத்து கூட்டத்தை தவிர்க்கும் வகையில், காபூல் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. காபூல் விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் அனைத்து விமான சேவையையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், இன்று பிற்பகல் 12.30 மணிக்கு டெல்லியிலிருந்து கிளம்பவிருந்த ஏர் இந்தியா விமானம் கிளம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
The sheer helplessness at Kabul airport. It’s heartbreaking! #KabulHasFallen pic.twitter.com/brA3WRdPp8
— Ahmer Khan (@ahmermkhan) August 16, 2021
newstm.in