கலைமாமணி எஸ்.எம்.உமர் காலமானார்
காரைக்காலை சேர்ந்த இயக்குநர், தயாரிப்பாளர் என்ற பன் முகங்கள் கொண்ட "கலைமாமணி" எஸ்.எம்.உமர் இன்று அதிகாலை 3 மணியளவில் காலமானார். ஆம்.. இந்த ‘கலைமாமணி" எஸ்.எம்.உமர் சென்னைவாசிகளுக்குப் புதியவரல்ல, தியாகராயநகர் பனகல் பார்க் அருகில் இவர் நடத்திவரும் உமர் கயாம் உணவு விடுதி மிகவும் பிரபலம்.
காரைக்காலை சேர்ந்த இயக்குநர், தயாரிப்பாளர் என்ற பன் முகங்கள் கொண்ட "கலைமாமணி" எஸ்.எம்.உமர் இன்று அதிகாலை 3 மணியளவில் காலமானார்.
ஆம்.. இந்த "கலைமாமணி" எஸ்.எம்.உமர் சென்னைவாசிகளுக்குப் புதியவரல்ல, தியாகராயநகர் பனகல் பார்க் அருகில் இவர் நடத்திவரும் உமர் கயாம் உணவு விடுதி மிகவும் பிரபலம்.
தமது 20 வயதில் திரைத்துறையில் நுழைந்து, உதவி இயக்குநர், இயக்குநர், தயாரிப்பாளர் என்ற முகங்களுடன் வலம் வந்து, சுமார் 600 இந்திய மொழிப் படங்களை வியத்நாம் மொழியில் டப் செய்து வெளியிட்டு, பழம்பெரும் நடிகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் எஸ்.எம்.உமர்.எம்.கே.தியாகராஜபாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், எம்.எஸ்.சுப்புலட்சுமி, அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., இந்திய முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் சமது என்று பல பிரமுகர்களும் இவரின் நெருங்கிய நண்பர்கள். பிரபலங்களுடன் பழகிய இவருக்குச் சாமான்யர்களிடமும் நெருக்கமான உறவும் தொடர்பும் உண்டு என்பதுதான் சிறப்பு.
திரைப்படத் துறையில் செய்த சாதனைக்காக, தமிழக அரசு 1997ல் இவருக்கு "கலைமாமணி" விருதும், 2010ம் ஆண்டில் புதுவை அரசு "கலைமாமணி" விருதும் வழங்கிக் கௌரவித்துள்ளன. நாடகத்துறையில் தமது பங்களிப்பை வெளிப்படுத்தியதோடு, பத்திரிகைத் துறையில் நுழைந்து 1939-இல் இளம்பிறை, கதம்பம், குரல் மற்றும் உமர் கய்யாம் என்ற பத்திரிகைகளை நடத்தியுள்ளார்.
இவர் வாங்கிய பட்டங்கள் : தமிழக அரசு (1998), சினிமாவில் கலைச்செல்வர் விருது (1993), கலைச்சுடர் விருது (1995) என 25-க்கும் மேற்பட்ட விருதுகளை இவர் பெற்றுள்ளார்.புதுச்சேரி அரசு 2006-இல் கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது
கடந்த ஓராண்டுக்கும் மேலாக முதுமை காரணமாக வீட்டிலேயே இருந்தவர், இன்று (திங்கள்கிழமை) அதிகாலை 3 மணியளவில் காலமானார். காரைக்காலில் இன்று பகல் 11.30 மணியளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
newstm.in