கமல் பட நடிகர் திடீரென காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி !!

கமல் பட நடிகர் திடீரென காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி !!

Update: 2021-05-06 07:18 GMT

கமல்ஹாசன் நடிப்பில் 1989ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அபூர்வ சகோதரர்கள். இதில் கமல் உயரம் குறைந்த நடிகராக நடித்திருப்பார். கமலின் இந்த கதாபாத்திரம் மிகப்பெரியளவில் பேசப்பட்டது. இந்த படத்தில் கமலுடன் உயரம் குறைந்த நடிகர்கள் சிலர் நடித்திருப்பார்கள். அதில் ஒருவர் தான் மேலா ரகு. 

அதன்பின்னரும் அவர் பல்வேறு படங்களில் சிறு சிறுவேடங்களில் நடித்து வந்தார். மலையாளம் படங்களிலும் இவருக்கு அறிமுகம் கிடைத்தது. அந்த வகையில் இவர் மோகன்லாலுடன் த்ரிஷ்யம், மேலா உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார். 

இந்தநிலையில் தற்போதுத 60 வயதாகும் மேலா ரகு நேற்று திடீரென காலமானார். கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தனது வீட்டில் திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்ட குடும்பத்தினர் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலா ரகு மறைவிற்கு திரையுலகினர் அனைவரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
  

newstm.in

Tags:    

Similar News