1979 ஆம் ஆண்டுக்கு பிறகு பிரபல திரையரங்கில் கமல்ஹாசன்.. நெகிழ்ந்த உரிமையாளர் !!

1979 ஆம் ஆண்டுக்கு பிறகு பிரபல திரையரங்கில் கமல்ஹாசன்.. நெகிழ்ந்த உரிமையாளர் !!

Update: 2022-01-25 17:45 GMT

நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தேர்தல் முடிந்ததும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். எனினும் காலில் அறுவைச் சிகிச்சை, அடுத்து கொரோனா பாதிப்பு என மருத்துவமனையில் இருந்துவந்த கமல்ஹாசன் தற்போது அதில் இருந்து மீண்டு வந்துள்ளார். 

இந்த நிலையில், கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் படமாக்கப்பட்டு வருவதாக திரையரங்க உரிமையாளர் ராகேஷ் கௌதம் மகிழ்ச்சிபொங்க தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், 'விக்ரம் படப்பிடிப்பிற்காக நடிகர் கமல்ஹாசன் வெற்றி திரையரங்கத்திற்கு வந்தது எங்களுக்கு பெருமையான தருணம். கடைசியாக 1979 ஆம் ஆண்டு கல்யாண ராமன் படத்தின் நூறாவது நாளின் போது கமல்ஹாசன் வந்திருந்தார். எங்கள் திரையரங்கை தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு நன்றி, என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். 


விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஆடுகளம் நரேன், காளிதாஸ் ஜெயராமன், பிக்பாஸ் ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்தப் படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பாடாய் படுத்திவரும் இந்த கொரோனா பரவல் காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு தாமதமானாதல் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போக  அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் நட்சித்திர பட்டாளத்துடன் படப்பிடிப்பு நடந்து வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

newstm.in


 

Tags:    

Similar News