'83' படத்தை தமிழில் வெளியிடும் கமல்ஹாசன்..!
1983ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் '83' படத்தை, நடிகர் கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தமிழில் வெளியிட உள்ளது. இதன் தெலுங்கு பதிப்பை நடிகர் நாகார்ஜுனா வெளியிடுகிறார்.
1983ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் '83' படத்தை, நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தமிழில் வெளியிடுகிறது.
சச்சின் டெண்டுல்கர், தோனி என கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல், கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983ம் ஆண்டு உலக கோப்பையை வென்று சாதனை நிகழ்த்தியது. இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ‘83’ என்ற பெயரில் புதிய திரைப்படம் தயாராகி வருகிறது.
கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்க, கபீர் கான் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். கபிலதேவ் தலைமையிலான அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் தமிழ் நடிகர் ஜீவா நடிக்கிறார்; இதன் மூலம், பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தியா முழுவதும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. '83' படத்தை, கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தமிழில் வெளியிட உள்ளது. இதன் தெலுங்கு பதிப்பை நடிகர் நாகார்ஜுனா வெளியிடுகிறார்.
இதுகுறித்து, நடிகர் கமல்ஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில், "உலகக்கோப்பையை வென்ற வரலாற்று தருணத்தை ஒவ்வொரு இந்தியனும் மனிதில் வைத்துள்ளனர். '83' திரைப்படத்தை தமிழில் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறியுள்ளார். இந்தியா முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கிறது.
newstm.in