கர்ணன் அழைப்பு நாளை இரவு 8 மணிக்கு: தனுஷ் அறிவிப்பு..!

கர்ணன் அழைப்பு நாளை இரவு 8 மணிக்கு: தனுஷ் அறிவிப்பு..!

Update: 2021-02-17 20:05 GMT

கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள  “கண்டா வர சொல்லுங்க” என்கிற சிங்கிள் டிராக் பாடல் நாளை இரவு 8 மணிக்கு வெளியிடப்படும் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘கர்ணன்’. வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ். தாணு தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் இரண்டாவதாக இப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் தனுஷுடன் மலையாள நடிகர் லால், நட்ராஜ் சுப்பிரமணியம், யோகி பாபு, கவுரி கிஷன் மற்றும் லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுக நடிகை ரஜீஷா விஜயன் நடித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 9ம் தேதி கர்ணன் திரைப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் தனுஷ், ’கர்ணன் அழைப்பு- கண்டா வர சொல்லுங்க’ என்கிற பாடலின் சிங்கிள் டிராக் நாளை இரவு 8 மணிக்கு வெளியிடப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும், இந்த பாடலுக்காக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரும் ரசிகர்களிடம் பாராட்டுதல்களை பெற்று வருகிறது.

கர்ணன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. அதை தொடர்ந்து, ஹிந்தியில் தயாராகி வரும் அந்திரங்கி ரே மற்றும் இன்னும் பெயரிடப்படாத கார்த்திக் நரேன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.  இதுதவிர செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கு முன்னதாக ஹாலிவுட்டில் தயாராகி வரும் ‘தி கிரே மேன்’ என்கிற படத்தின் தனுஷ் நடித்து வருகிறார். இதற்காக அமெரிக்க சென்றுள்ள அவர், விரைவில் இந்தியாவுக்கு திரும்பி மீதமுள்ள படவேலைகளில் ஈடுபடுவார் என தெரிகிறது. 



 

Tags:    

Similar News