அதிர்ச்சியில் கேரளா.. முதல் முறையாக சிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு !!

அதிர்ச்சியில் கேரளா.. முதல் முறையாக சிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு !!

Update: 2021-07-09 06:20 GMT

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்களில் ஒன்றாக கேரளா திகழ்கிறது. அங்கு கொரோனா 2ஆவது அலை கட்டுப்படுத்தப்பட்டாலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், சில முக்கியமான கட்டுப்பாடுகள் தொடர்கிறது. இந்த நிலையில் அங்கு சிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள கேரளாவை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி ஒருவர் காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகள் ஏற்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனிடையே அவருக்கு கடந்த 7ஆம் தேதி குழந்தை பிறந்தது.

எனினும் உடல்நலக்குறைவால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த அந்த பெண்ணின் ரத்த மாதிரிகளை சேகரித்து புனேயில் உள்ள வைரஸ் ஆய்வு நிறுவனத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு சிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மருத்துவத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதன் மூலம் கேரளாவில் இந்த தொற்று முதன் முதலாக கண்டறியப்பட்டு இருக்கிறது என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். கேரளாவில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளே இன்னும் மறையாமல் இருக்கும் நிலையில், சிகா வைரசும் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது மாநில அரசுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. 

சிகா வைரஸ் ஏடிஸ் கொசுக்களால் பரவக்கூடியது ஆகும். இதனையடுத்து அங்கு சுகாதார பணிகள், கொசு ஒழிப்பு பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது.  

newstm.in

Tags:    

Similar News