இந்தியாவின் முதன்முதலாக கொரோனாவால் பாதித்த கேரள பெண்ணுக்கு மீண்டும் தொற்று பாதிப்பு !!
இந்தியாவின் முதன்முதலாக கொரோனாவால் பாதித்த கேரள பெண்ணுக்கு மீண்டும் தொற்று பாதிப்பு !!
கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக சீனாவின் வுஹான் நகரம் கருதப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் அந்நகரில் இருந்து பரவிய கொரோனா இன்று உலகம் முழுவதும் பரவி தவித்துக்கொண்டிருக்கிறது. கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி வுஹான் நகரில் இருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவியான இளம்பெண்ணுக்கு வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டன. பின்னர் அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அப்பெண்ணுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் அப்பெண் திருச்சூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். பின்னர் கேரளாவில் கொரோனா தீவிரமாக பரவி பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அதன்தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் கடந்த ஆண்டு சீனாவில் இருந்து திரும்பி முதன்முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் தற்போது மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் அவர் அறிகுறியில்லாமல் இருக்கிறார். தனது படிப்பு தொடர்பான ஆய்வு நோக்கங்களுக்காக டெல்லிக்குச் செல்லத் தயாராக இருந்ததால் அவரது மாதிரிகள் சோதிக்கப்பட்டன. பின்னர் ஆர்டி-பி.சி.ஆர் முடிவு வெளியான நிலையில் அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அப்பெண் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கேரளாவில் நேற்று ஒரே நாளில் 7,798 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாநிலத்தில் தடுப்பூசிகள் குறித்து, முதல் 18 வயது பிரிவில் 43 சதவீதம் பேர் முதல் டோஸையும், 12 சதவீதம் பேர் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர் என்று முதல்வர் கூறினார்.
newstm.in