சின்னத்தம்பி படம் குறித்து குஷ்பு நெகிழ்ச்சி ட்வீட்!

சின்னத்தம்பி படம் குறித்து குஷ்பு நெகிழ்ச்சி ட்வீட்!

Update: 2021-04-14 20:21 GMT

1991ல் சின்னத்தம்பி தம்பி வெளியிடப்பட்டது.பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு ஜோடியாக நடித்த இந்தப்படம் வசூலில் பெரிய சாதனை நிகழ்த்திய படம் . பிரபு, குஷ்பு திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. இந்த படத்திற்கு  பிறகு தான் இருவரும் முன்னணி நட்சத்திரங்களாக உயர்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்தம்பி,தமிழகத்தில் பல  தியேட்டர்களில் 300 நாட்கள் ஓடியது. இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து தமிழக அரசின் விருதுகளை அள்ளியது.

சின்னத்தம்பி படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில்  நடிகை குஷ்பு படத்தில் பிரபுவுடன் நடித்த புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


அதில் சின்னத்தம்பி படம் வெளியாகி 30 வருடங்கள் ஆகிவிட்டன. காலம் வேகமாக பறந்து இருக்கிறது. படத்தின் இயக்குனர் பி.வாசு, இளையராஜா, சமீபத்தில் மறைந்த படத்தின் தயாரிப்பாளர் பாலு எனக்கு பிடித்த சக நடிகர் பிரபு மற்றும் என் மீது அன்பை பொழிந்த தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

newstm.in

Tags:    

Similar News