ஸ்டம்பை காலால் உதைத்தும்.. தூக்கி அடித்தும் ரகளை !! ஷகிப்-க்கு இது தான் தண்டனையா? ரசிகர்கள் அதிருப்தி

ஸ்டம்பை காலால் உதைத்தும்.. தூக்கி அடித்தும் ரகளை !! ஷகிப்-க்கு இது தான் தண்டனையா? ரசிகர்கள் அதிருப்தி

Update: 2021-06-13 17:21 GMT

உண்மையில் சிறுவயது முதல் தெருக்களில் நாம் விளையாடும்போது கூட இந்தளவுக்கு நடந்துகொண்டிருக்க மாட்டோம் என அந்த கிரிக்கெட் போட்டியையும், அந்த வீடியோவையும் பார்த்தவர்கள் நிச்சயம் நினைத்திருப்பார்கள். அந்தவுக்கு மோசமாக நடந்துகொண்டார் வங்கதேச கிரிக்கெட் அணி வீரர் ஷகிப் அல் ஹசன். 

ஐபிஎல் தொடர் பாணியில் வங்கதேசத்திலும் டாக்கா பிரீமியர் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதில் அபஹானி மற்றும் மொஹம்மதன் அணிகளுக்கிடையிலான லீக் போட்டி தானாவில் நடைபெற்றது. அபஹானி அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஹகிப் அல் ஹசன் பந்துவீசினார். முஷ்பிகுர் ரஹ்மானுக்கு களநடுவர் எல்.பி.டபியூ கொடுக்க மறுத்திருக்கிறார். இதனால் கோபமடைந்த மொஹம்மதன் அணியின் கேப்டன் ஹகிப் அல் ஹசன் ஸ்டம்புகளை எட்டி உதைத்தோடு மட்டுமல்லாமல், ஸ்டம்புகளை தூக்கி அடித்து நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் தொடர்ச்சியாக எதிரணி கோச்சான கலீல் மஹ்மூத்திடமும் வாக்குவாதத்தில் அவர் ஈடுபட்டார்.

இது தொடர்பான வீடியோ வைரலானது. ஷிகிப் அல் ஹசனின் இந்த செயல் உலக கிரிக்கெட் ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியது. ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள் மற்றும் பிற அணி நிர்வாகிகளிடையேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஷகிப் அல் ஹசனின் இந்த செயல் ஒரு வீரருக்கு  அலகல்ல. சீனியர் வீரரான ஷகிப் அல் ஹசன் இதுவரை கற்றுக்கொண்டது என்னவென்று பலரும் கேள்வி எழுப்பினர். சமூக வலைதளங்களில் அவரையும் அந்நாட்டு அணியையும் வறுத்தெடுத்தனர். 

இந்தநிலையில், தன்னுடைய தவறுக்காக ஃபேஸ்புக்கில் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தார் ஷகிப் அல் ஹசன். இருப்பினும் இது கிரிக்கெட் விதிகளுக்கு முரணான செயல் என்பதால் அவர் மீது ஒழுங்கீன நடவடிக்கையை வங்கதேச கிரிக்கெட் வாரியம் எடுத்திருக்கிறது. 

டாக்கா பிரிமியர் லீக்கில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஷகிப் அல் ஹசனுக்கு டாக்கா பிரிமியர் லீக்கில் 3 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம். இது தவிர 5 லட்சம் Taka (5800 அமெரிக்க டாலர்கள்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஷகிப் அல் ஹசனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டனை மிகவும் சிறியது எனவும் அவருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் எனவும் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக ஐபிஎல் போட்டியின் போது சூதாட்ட தரகர் ஒருவர் ஷகிப் அல் ஹசனை நாடியது குறித்து அவர் ஐசிசியின் கவனத்துக்கு கொண்டு வரவில்லை என்பதற்காக அவருக்கு ஒரு ஆண்டு விளையாட விதிக்கப்பட்டிருந்த தடை சமீபத்தில் தான் முடிவுக்கு வந்து அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.


newstm.in

Tags:    

Similar News