யாரும் முயற்சிக்காத உண்மை, புனைவு கதைக்களத்தில் உருவாகும் ‘கொற்றவை: தி லெகசி’

யாரும் முயற்சிக்காத உண்மை, புனைவு கதைக்களத்தில் உருவாகும் ‘கொற்றவை: தி லெகசி’

Update: 2021-08-07 18:20 GMT

பிரபல தயாரிப்பாளராக உள்ள சி.வி.குமார், இயக்குனர் அவதாரம் எடுத்து புதிய படங்களை இயக்கி வருகிறார்.  அவர் இயக்கத்தில் உருவான மாயவன், கேங்ஸ் ஆப் மெட்ராஸ் ஆகிய படங்கள்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இதையடுத்து இதுவரை யாரும் முயற்சிக்காத உண்மை, புனைவு கதைக்களத்தில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் சி.வி.குமார். மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகத்திற்கு ‘கொற்றவை: தி லெகசி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

Full View

மயில் பிலிம்ஸ் டாக்டர் கே.பிரபு தயாரிக்கும் இப்படத்திற்கு எழுத்தாளர் தமிழ்மகன் வசனம் எழுதியுள்ளார். கனகசபை என்பவர் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக சந்தனா ராஜ் மற்றும் சுபிக்ஷா ஆகிய இருகதாநாயகிகள் நடித்துள்ளனர். புதையல் வேட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் 2 ஆயிரம் வருடங்களுக்கு முன் மறைக்கப்பட்ட புதையலை எவ்வாறு கதாநாயகன் கண்டுபிடிக்கிறான் என்பது கிளைமேக்ஸாக இருக்குமாம்.

பிரமாண்ட பொருட்செலவில் மூன்று பாகங்களாக தயாராகி வரும் இப்படம் குறிப்பிட்ட இடைவெளியில் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகவுள்ளது. முதல் பாகத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. ஏற்கனவே இப்படத்தில் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

வரலாற்று பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டீசரில் ‘இது கதையல்ல 2 ஆயிரம் வருட நம்பிக்கை’ என்ற வசனம் கம்பீரமாக இடம்பெற்று படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.  இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

Similar News