என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!! காதலியை கரம் பிடிக்க மாமியாருக்கு கிட்னி கொடுத்த காதலன்.. கடைசியில் கழற்றி விட்ட காதலி..
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!! காதலியை கரம் பிடிக்க மாமியாருக்கு கிட்னி கொடுத்த காதலன்.. கடைசியில் கழற்றி விட்ட காதலி..
தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக காதலியின் தாய்க்கு சிறுநீரகத்தை தானமாக அளித்த ஒரே மாதத்திற்குள் காதலி தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துவிட்டதாக காதலன் புலம்பி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
மெக்ஸிகோவின் Baja California பகுதியைச் சேர்ந்த Uziel Martinez என்ற ஆசிரியர் தான் புலம்பித் தவிக்கும் அந்த காதலர். இவர் தனக்கு நேர்ந்தவை குறித்து டிக் டாக்கில் வீடியோவாக பேசி வெளியிட்டுள்ளார்.
அதன்படி, “எனது காதலியின் தாயாருக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்தேன். ஆனால் நான் தானம் அளித்த ஒரு மாதத்துக்குள் என்னை ஏமாற்றிவிட்டு என் காதலி வேறு நபரை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார்” என அவர் கூறியுள்ளார்.
அந்த இளைஞர் வெளியிட்ட வீடியோ 14 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. Martinezக்கு பலரும் ஆறுதல்கள் கூறி தேற்றி வருகின்றனர். சிலரோ, காதலியை இப்படி பொதுவெளியில் அவமதித்து விட்டீர்களே என கடிந்து கொண்டுள்ளனர்.
தான் வெளியிட்ட வீடியோவை இத்தனை பேர் பார்ப்பார்கள் என கனவிலும் நினைத்து பார்த்திராத வகையில், அந்த வீடியோவை பல லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர்.
இதை பார்த்து தர்மசங்கடம் அடைந்த Uziel Martinez, தனது காதலி மீது தனக்கு வெறுப்பு ஏதும் கிடையாது. இந்த வீடியோ இத்தனை பேர் பார்க்கும் வகையில் பிரபலமடையும் என நான் எதிர்பார்க்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.