ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர் ஆண்டி கார்ட்ரைட். இவர் தனது மனைவி மெரினா கோகல் (37) உடன் வசித்து வந்துள்ளார். ஆனால்,  ஆண்டி கார்ட்ரைட்டை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் காணவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் பல கோணங்களில் விசாரணை நடத்தியும் அவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை.

இது குறித்து அவரது மனைவியிடம் சில தகவல்களை கேட்டப்போது சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் நடந்த விசாரணை அடிப்படையில், வீட்டில் ஆண்டி கார்ட்ரைட் உடல் பாகங்கள் குளிர்தானப்பெட்டியில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டெடுத்தனர். முதற்கட்டமாக ஆண்டி கார்ட்ரைட்டின் மனைவி மெரினா கோகல் (37) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

விரிவான விசாரணையில், ஆண்டி கார்ட்ரைட், நாடியா என்ற 25 வயது பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் மனைவி மெரினா கோகல் தனது தாயுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து முதலில் கணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர் மனைவி மெரினா கோகல் கணவனின் சடலத்துடன் உடலுறவு கொண்டதாகவும், அதனைத்தொடர்ந்து கணவரின் உடலை பல துண்டுகளாக வெட்டி ரத்தம் குடித்ததாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. கொலைக்கு பிறகு வீட்டையே வினிகர் ஊற்றி சுத்தமாக் கழுவியதாகவும் மெரினா மீது குற்றம் சாட்டப்பட்டது.

அடுக்கடுக்கான கொடூர குற்றச்சாட்டுகளால் சிறையில் கடந்த ஆண்டு அடைக்கப்பட்டார் மெரினா. இதற்கு துணையாக இருந்த மெரினாவின் தாய் எலெனாவையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கும் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது மெரினாவுக்கு வீட்டுக்காவலுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் சிறையில் இருந்து வந்த நிலையில் ஜாமீன் கோரி மெரினா கோகல் மனு தாக்கல் செய்திருந்தார். அது தொடர்பான வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தபோது, மெரினா கணவனை கொலை செய்ததான சரியான ஆதாரங்கள் இல்லாததால் அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.  இருப்பினும், அவர் இன்னும் விசாரணையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, ஆண்டி - மெரினா தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில் அவர் அங்குள்ள காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்க மெரினாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவையே உலுக்கிய கொடூர கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

newstm.in

Tags: