தன் மகனை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த கிங்காங்..!
தன் மகனை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த கிங்காங்..!
தென்னிந்திய மொழிகளில் இயங்கும் அனைத்து திரைத்துறைகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் கிங்காங். தொடர்ந்து தற்போதும் அவர் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் பல்வேறு நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார்.
தமிழில் வெளியான ‘அதிசியப் பிறவி’ படம் தான் கிங்காங்கின் முதல் படம். இவருடைய உண்மையான பெயர் சங்கர் ஆகும். எனினும், தன்னுடைய புனைப்பெயரான கிங்காங் மூலம் சினிமா உலகில் பிரபலமானார்.கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் என பல முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்து முத்திரை பதித்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து தற்போது இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் தனது மகனின் பிறந்தநாளில் அவரை உலகிற்கே அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதை தொடர்ந்து பலரும் கிங்காங் மற்றும் அவருடைய மகனுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் கிங்காங்கின் மகனின் புகைப்படத்தை பலரும் சமூகவலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.