ஜூம் கால் ஆபீஸ் மீட்டிங்கின் போது அதில் கலந்துகொண்ட அதிகாரிக்கு அவரது மனைவி முத்தமிட முயற்சிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்ளில் வைரலாகி வருகிறது.

தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் “Zoom call so funny" என்று பதிவிட்டு வீடியோ ஒன்றை ட்வீட் செய்துள்ளார்.  அந்த வீடியோவில், ஜூம் கால் மீட்டிங்கின்போது ஒரு நபர் பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதிப்பதில் மும்முரமாக இருந்தார். 

அப்போது அந்த நபரின் அறைக்கு வந்த அவரது மனைவி அவருக்கு திடுதிப்பென்று முத்தமிட கொடுக்க முயல்கிறார். இதனை எதிர்பாராத அந்த நபர், தான் மீட்டிங்கில் இருப்பதை காட்டும் வகையில், தனது லேப்டாப்பை நோக்கி சைகை காண்பிக்கிறார். இதில் அந்த நபரின் முகபாவனைகளை பார்த்து அந்த பெண் வெட்கம் கலந்த புன்னகையில் திளைக்கிறார். அவரது பதிவுக்கு பலரும் கவலையான மகிழ்ச்சியான வகையில் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதேபோல் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திராவும் இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டு நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். அதில், நான் அந்த பெண்ணை இந்த ஆண்டின் சிறந்த மனைவியாக பரிந்துரைக்கிறேன். மேலும் கணவர் அதிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, முகம் சுழிக்காமல் இருந்திருந்தால், அவர்களை இந்த ஆண்டின் சிறந்த ஜோடியாக  பரிந்துரைத்திருப்பேன், ஆனால் அவர் அதை செய்ய தவறிவிட்டார் என தெரிவித்துள்ளார்.



தற்போது இந்த வீடியோ இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளுடன் சமூக வளைதளங்களில் வைரலாகியுள்ளது. இது தொடர்பாக, நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

newstm.in

Tags: