குணமடைந்தார் கே.எல்.ராகுல்.. இந்திய அணியில் இடம் கிடைக்குமா?
குணமடைந்தார் கே.எல்.ராகுல்.. இந்திய அணியில் இடம் கிடைக்குமா?
ஐபிஎல் போட்டியின்போது பாதியில் வெளியேறி அறுவை சிகிச்சை மேற்கொண்ட கேஎல் ராகுல் அதில் இருந்து குணமடைந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேனாக இருப்பவர் கே.எல் ராகுல். ஐபிஎல் தொடரின்போது பஞ்சாப் அணியின் கேப்டனாக அணியை வழிநடத்தி வருகிறார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இவருக்கு திடீரென ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்.
அங்கு கே.எல்.ராகுல்-க்கு குடல்வால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவர் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இந்திய அணி வரும் ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து செல்கிறது. அதற்குள் உடற்தகுதி பெற்றுவிட்டால் அணியுடன் இங்கிலாந்து செல்வார் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கே.எல்.ராகுல் காயம் குணமாகி சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் நிச்சயமாக இங்கிலாந்து செல்வார் என்று தகவல்கள் கூறப்படுகிறது.
newstm.in