நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் விலகல்.. சூர்யகுமாருக்கு வாய்ப்பு ஏன்?

நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் விலகல்.. சூர்யகுமாருக்கு வாய்ப்பு ஏன்?

Update: 2021-11-23 18:15 GMT

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-0 என இந்திய அணி முழுமையாக வென்றது. டெஸ்ட் தொடர் நவம்பர் 25 முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெறுகிறது.

இதனிடையே, இடது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக கே.எல். ராகுல் முதல் டெஸ்டிலிருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இதையடுத்து அவருக்கு மாற்றாக சூர்யகுமார் யாதவ், இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மாற்றம் காரணமாக டெஸ்ட் தொடரில் மயங்க் அகர்வாலும் ஷுப்மன் கில்லும் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


கான்பூர் டெஸ்டில் ஷ்ரேயஸ் ஐயரும் அறிமுகமாகிறார். இதனால் ஷ்ரேயஸ் ஐயருடன் போட்டியிட வேண்டிய நிலைமையில் சூர்யகுமார் யாதவ் உள்ளார். சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் அணிக்கு அவரைத் தேர்வு செய்தது ஏன் என்பதற்கு ஒரு விளக்கம் வெளிவந்துள்ளது. 
கடந்த 2019-20 ரஞ்சி கோப்பைப் போட்டியில் மும்பை அணிக்காக 10 இன்னிங்ஸில் இரு சதங்கள், இரு அரை சதங்களுடன் 508 ரன்கள் எடுத்தார் சூர்யகுமார் யாதவ். சராசரி - 56. 44. 

இந்திய அணியின் வெள்ளைப் பந்து ஆட்டங்களில் தொடர்ந்து விளையாடி வருவதாலும் கடைசியாக விளையாடிய ரஞ்சி கோப்பைப் போட்டியில் திறமையை நிரூபித்ததாலும் இந்திய டெஸ்ட் அணிக்கு சூர்யகுமார் யாதவ் தேர்வாகியுள்ளார். 
 

newstm.in

Tags:    

Similar News