கோர ரயில் விபத்து... 51 பேர் பலி.. சுற்றுலா சென்றப்போது நடந்த சோகம் !
கோர ரயில் விபத்து... 51 பேர் பலி.. சுற்றுலா சென்றப்போது நடந்த சோகம் !
தாய்வானில் அரசாங்க விடுமுறையான வெள்ளிக்கிழமை, டொரொகோ ஜார்ஜ் சுற்றுலா பகுதிக்கு ரயில் ஒன்று சென்றுள்ளது. ரயில் சுரங்கப்பாதையில் இருந்து வெளியே வந்தவுடனேயே மேலிருந்து சரக்கு லாரி ஒன்று கவிழுந்து விழுந்துள்ளது.
ரயிலில் 350 பயணிகள் இருந்ததாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்கு நாள் நடக்கும் டோம்ப் ஸ்வீப்பிங் விழாவின் முதல் நாளில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. செங்குத்தான குன்றின் வழியாக சென்ற ஒரு லாரி கீழே விழுந்தது என்றும் அப்போது சுரங்கத்தின் வழியாக சென்று கொண்டிருந்த ரயில் அதன் மீது மோதியதே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. இதனால் முதல் ஐந்து பெட்டிகளுக்கு அதிக சேதம் ஏற்பட்டது என்றும் ஹூலியன் கவுண்டி மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்த கோர விபத்தில் 51 பேர் பலியாக, குறைந்தது 72 பேர் காயமடைந்திருக்கலாம் என்றும் முதல்கட்டமாக தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
விபத்துக்குப் பிறகு ரயிலின் முதல் 4 பெட்டிகளிலிருந்து சுமார் 80-90 பேரை மீட்டுள்ளனர். ரயில் பெரும்பாலான பெட்டிகள் குகைக்குள் இருந்துவெளியே வரவில்லை. குகைப்பாதையில் சிக்கிய பெட்டிக்குள்ளிலிருந்து குழந்தைகளும் பெண்களும் அலறும் சப்தம் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் குலைநடுங்கச் செய்கின்றன. குகைக்குள் சிக்கிய பெட்டியில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ரயிலின் பெரும்பகுதி இன்னும் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளது. இதனால் பயணிகளை வெளியே பாதுகாப்பாக மீட்பது கடினமாகிவிட்டது. பயணிகளை பாதுகாப்பாக மீட்பதற்கு கதவுகள், ஜன்னல்கள் மற்றும் கூரைகளில் மீட்புப்பணியினர் ஏற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
#BREAKING: Major train accident has occurred at the entrance of the #Daqingshui Tunnel in #Taiwan.
— ज़ाहिद अब्बास ZAHID ABBAS 🇮🇳 (@abbaszahid24) April 2, 2021
Train collided with an engineering vehicle and derailing.
Train was carrying 350 passengers, with at least 20 people were slightly and seriously injured. pic.twitter.com/pxbA84Qlas
newstm.in