இஸ்லாமிய பெண் வரைந்த கிருஷ்ணர் படம்... கோவிலில் வைத்து வழிபாடு !!

இஸ்லாமிய பெண் வரைந்த கிருஷ்ணர் படம்... கோவிலில் வைத்து வழிபாடு !!

Update: 2021-09-30 09:26 GMT

இஸ்லாமிய பெண் வரைந்த கிருஷ்ணர் படத்தை ஒரு கோவில் நிர்வாகம் முன்வந்து தானாகவே வாங்கிக்கொண்டு கோவிலில் வைத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜாஸ்னா சலீம். 2 குழந்தைகளுக்கு தாயான இவர் ஓவியம் வரைவதில்  அதிக ஆர்வம் கொண்டுள்ளார். மேலும் ஏராளமான ஓவியங்களை தத்ரூபமாக வரைந்து புகழ்பெற்றார். 

இந்நிலையில் ஜாஸ்னா தனது சிறுவயதில் கிருஷ்ணரின் புகைப்படத்தை பார்த்தும் பிடித்து போய் அதை தான் வரைய வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. இந்நிலையில் அவர் பல கிருஷ்ணர் படங்களை வரைந்துள்ளார். இதுவரை 500க்கும் அதிகமான வித விதமான கிருஷ்ணர் படங்களை வரைந்திருந்தார். ஆனால் இவர் வரைந்த ஒரு படம் கூட கிருஷ்ணர் கோவிலுக்குள் இல்லை. இவர் இஸ்லாமிய பெண் என்பதால் இதற்கான முயற்சியையும் எடுக்கவில்லை.

இந்த விவகாரம் வெளிவரவே அவர் வரைந்த கிருஷ்ணர் படத்தை ஒரு கோவில் நிர்வாகம் முன்வந்து தானாகவே வாங்கிக்கொண்டு கோவிலில் வைத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளம் பகுதியில் உள்ள உளநாடு என்ற கிராமத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் இவர் வரைந்து வைத்திருக்கும் கிருஷ்ணர் படத்தை வாங்கி கோவில் நிர்வாகம் இவருக்கு அழைப்பு விடுத்தது. அதன் பேரில் இவர் தான் வரைந்த ஓவியத்தை எடுத்துக்கொண்டு இவர் கோவிலுக்கு சென்று தனது கிருஷ்ணர் படத்தை ஓவியத்தை காணிக்கையாக வழங்கினார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இவர் பிரதமர் மோடிக்கு ஒருநாள் தான் வரைந்த கிருஷ்ணர் படத்தை நேரில் சந்தித்து பரிசளிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். 

newstm.in

Tags:    

Similar News