கடைசி நேர குழப்பம்.. திமுகவில் ஐக்கியமான சமக வேட்பாளர்.. சரத்குமார், ராதிகா அதிர்ச்சி !!

கடைசி நேர குழப்பம்.. திமுகவில் ஐக்கியமான சமக வேட்பாளர்.. சரத்குமார், ராதிகா அதிர்ச்சி !!

Update: 2021-03-23 07:01 GMT

திருச்சி லால்குடி சட்டமன்ற தொகுதி சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் திடீரென திமுகவில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

அதிமுக கூட்டணியில் இருந்த திடீரென சமத்துவ மக்கள் கட்சி வெளியேறியது. பின்னர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து 40 தொகுதியில் போட்டியிடுகிறது. இதில் லால்குடி சட்டமன்ற தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளராக உள்ள பெட்டவாய்த்தலை சேர்ந்த முரளி கிருஷ்ணன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

கடந்த சில நாட்களாக அவர் தீவிர பரப்புரை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று திமுக முதன்மை செயலாளர் கே.என் நேருவை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.  இந்த நிகழ்வின் போது திமுக சட்டமன்ற உறுப்பினரும் லால்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான சௌந்தரபாண்டியன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி கலந்து கொண்டனர்.

சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த வேட்பாளர் திமுகவில் இணைந்து மேலும் திமுகவை பலப்படுத்தும் விதமாக திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் வாக்கு சேகரித்து வருகின்றனர். 
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முரளி கிருஷ்ணன் சமக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். வேட்புமனுக்களை நேற்று வாபஸ் பெற கடைசி நாள் என்ற நிலையில் தனது வேட்புமனுவை முரளி கிருஷ்ணன் வாபஸ் பெற்றுக்கொண்டார். இவர் மூன்று முறை கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் திமுகவில் இணைந்ததால் சமக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். லால்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி  வேட்பாளராக தமிழ் மாநில கட்சி சேர்ந்த தர்மராஜ், திமுக சார்பில் சௌந்தரபாண்டியன், அமமுக சார்பில் விஜயமூர்த்தி போட்டியிடுகின்றார்.

newstm.in

Tags:    

Similar News