லதா மங்கேஷ்கருக்கு நிமோனியா உறுதி.. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி..!
லதா மங்கேஷ்கருக்கு நிமோனியா உறுதி.. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி..!
இந்தியாவில் பல மாதங்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாகவே வைரஸ் பாதிப்பு அதிகரித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கொரோனா இரண்டு அலைகளைவிட 3வது அலையில் பெரும்பாலான திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள் சிக்கி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது, இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
92 வயதான லதா மங்கேஷ்கருக்கு கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் இருந்தது தெரியவந்த நிலையில், அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தொற்று உறுதியான நிலையில், அவர் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வயது மூப்பால் முன்னெச்சரிக்கை நோக்கில் மட்டுமே லதா மங்கேஷ்கர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு நிமோனியா காய்ச்சலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.