லதா மங்கேஷ்கர் உடல் நிலை – புதிய தகவல்!!
லதா மங்கேஷ்கர் உடல் நிலை – புதிய தகவல்!!
பிரபல பாடகி லதா மங்கேஷ்கர், கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா உறுதி செய்யப்பட்ட லதா மங்கேஷ்கர் லேசான அறிகுறிகளுடன் கடந்த 8ஆம் தேதி மும்பையின் பிரபல பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 92 வயதாகும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவர் அனுமதிக்கப்பட்டு 2 வாரங்கள் ஆகியுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் லதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் அவர் எத்தனை நாட்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் இருப்பார் என்பதை சொல்ல முடியாது என்றும், மருத்துவர் பிரதித் சமதானி தலைமையிலான குழுவினர் லதா மங்கேஷ்கருக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
விரைவில் அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்ப்பதாக லதாவின் தோழி தெரிவித்துள்ளார். அவரது உடல்நிலை தொடர்பாக தவறான எந்த தகவலையும் ரசிகர்கள் பகிர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நேரத்தில் லதா மங்கேஷ்கர் தொடர்பாக அதிகாரப்பூர்வமில்லாத தகவல்களை பகிரக் கூடாது. இதுவே அவரது குடும்பத்தினருக்கும், சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கும் நாம் செய்யும் உதவியாக அமையும் என்றும் கூறியுள்ளார்.
newstm.in