மறைந்த இயக்குநர் தாமிராவின் கலங்க வைக்கும் கடைசி வரிகள் !!

மறைந்த இயக்குநர் தாமிராவின் கலங்க வைக்கும் கடைசி வரிகள் !!

Update: 2021-04-27 19:33 GMT

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2-ம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மோசமாகிக் கொண்டே செல்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனா தொற்றுக்கு பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. முதல் அலையின் போது பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது பிரபல இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இயக்குநர்கள் பாலசந்தர், பாரதிராஜா ஆகியோவை வைத்து ரெட்டச்சுழி என்ற படத்தை இயக்கியவர் இவரே.

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் 1977ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி தாமிரா பிறந்தார். இவரது இயற்பெயர் தாவுத். மதுரை பல்கலைக்கழகத்தில் ஜர்னலிசம் படித்த தாமிரா, பொம்மை என்ற திரைப்பட இதழில் கட்டுரைகள் எழுதி வந்தார்.தொடர்ந்து இயக்குநர் கே.பாலச்சந்தரின் தொலைக்காட்சி தொடர்களுக்கு திரைக்கதையும், வசனமும் எழுதினார். இவர் 2010ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர், பாரதிராஜா நடிப்பில் ரெட்டச்சுழி என்ற திரைப்படத்தை இயக்கினார்.

தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வெளியான ஆண் தேவதை என்ற படத்தையும் இயக்கியவரும் இவரே. மூன்றாவது படத்தை ஜெமினி நிறுவனத்துக்காக இயக்க கதை தயாரிப்பில் இருந்தபோது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இயக்குநர் தாமிரா அசோக் பில்லர் அருகே உள்ள மாயா மருத்துமனையில் 20 நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார்.


ஆனால் சிகிச்சை பலன் அளிக்காததால் இன்று காலை அவர் உயிர் இழந்தார். இவருக்கு 3 மகன்கள், 1 மகள் உள்ளனர். அவரது மரணம் திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் தாமிரா பகிர்ந்த கடைசி பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி அவர் தன்னுடைய பேஸ்புக்கில் பதிவில் பகிர்ந்துள்ளதாவது, "இந்த உலகை வெல்ல அன்பைத் தவிர வேறு சூட்சுமம் இல்லை. என்னுள் இருக்கும் தீராக் கோபங்களை இன்றோடு விட்டொழிக்கிறேன். இனி யாரோடும் பகைமுரண் இல்லை.யாவரும் கேளிர்".. என பதிவிட்டிருந்தார்.

இந்த உலகை வெல்ல அன்பைத் தவிர வேறு சூட்சுமம் இல்லை. என்னுள் இருக்கும் தீராக் கோபங்களை இன்றோடு விட்டொழிக்கிறேன். இனி யாரோடும் பகைமுரண் இல்லை. யாவரும் கேளிர்

Posted by Thamira Kathar Mohideen on Sunday, April 11, 2021

 

அவரின் இந்த கடைசி பதிவை பார்த்த ரசிகர்கள் பலர், மரணத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்டு தான் யாரிடமும் பகைமை வளர்க்காமல் அன்பை விதைத்து இந்த உலகை விட்டு மறைய ஆயத்தமாகியுள்ளார் என பதிவிட்டு வருகின்றனர். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

newstm.in

Tags:    

Similar News