தலைவர் ரிட்டர்ன்ஸ்..!!

தலைவர் ரிட்டர்ன்ஸ்..!!

Update: 2021-07-07 13:15 GMT

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டன. விரைவில் ரஜினி டப்பிங் பணிகளையும் முடித்துவிடுவார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், ஒன்றிய அரசிடம் சிறப்பு அனுமதியையும் அவா் கோரி இருந்தாா். ரஜினிகாந்த், தனி விமானத்தில் செல்ல ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து ஒன்றிய அரசு உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட தனி விமானத்தில் சென்னையிலிருந்து அமெரிக்கா சென்றார் ரஜினி. அவருடன் குடும்பத்தினரும் சென்றார்கள்.

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வா்யாவும், மருமகன் தனுஷும் தற்போது அமெரிக்காவில் தான் உள்ளார்கள். தனுஷ் 'தி கிரே மேன்' எனும் ஆங்கிலப் படத்தில் நடிப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதமே அமெரிக்கா சென்றுவிட்டார்.

அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற மயோ மருத்துவமனையில் ரஜினிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. மருத்துவமனையின் வெளியே மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் ரஜினி சாலையைக் கடக்கும்போது எடுத்த புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் அமெரிக்காவில் ரஜினியுடன் அவருடைய ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தற்போது வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நாளை அதிகாலை சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Tags:    

Similar News