இந்தியாவுக்காக பிரார்த்திப்போம்.. பாக். கேப்டன் பாபர் அசாம் !!
இந்தியாவுக்காக பிரார்த்திப்போம்.. பாக். கேப்டன் பாபர் அசாம் !!
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2ஆவது அலை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு தீவிரமாக பரவி வருகிறது. வடமாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் உடல்கள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு எரிக்கப்பட்டு வருகிறது. ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் நாள்தோறும் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு திணறி வருகிறது. இந்தியாவில் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பல்வேறு நாட்டு அரசுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. அதேபோல், பிரபலங்கள் பலரும் இந்தியாவுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. துபாயில் உள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடத்தில் இந்திய தேசியக்கொடி லேசர் ஒளிவண்ணத்தில் ஒளிரச் செய்து ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளில் இருந்து ஆக்ஸிஜன் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவுக்கு பாகிஸ்தான் அரசும் ஆதரவு அளித்துள்ளது. இந்த நிலையில், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்காக பிரார்த்திப்போம் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எங்கள் பிரார்த்தனைகள் இந்திய மக்களுக்காக இருக்கும்; இந்தியாவுடன் துணை நிற்க வேண்டிய நேரம் இது. இந்திய மக்கள் கொரோனாவை கட்டுப்படுத்த அரசின் விதிகளை பின்பற்ற வேண்டும், என்று பாபர் அசாம் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
Prayers with the people of India in these catastrophic times. It's time to show solidarity and pray together. I also request all the people out there to strictly follow SOPs, as it's for our safety only. Together we can do it. #StayStrong pic.twitter.com/YCLb13ITlO
— Babar Azam (@babarazam258) April 26, 2021
newstm.in