கொரோனாவை வீழ்த்துவோம்.. கோவாக்சின் தடுப்பூசி விலை மேலும் குறைப்பு !!

 

Update: 2021-04-29 19:05 GMT

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ஆவது அலை மிகத்தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனொரு பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

ஆனால், மாநிலங்களுக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளதாக பாரத்பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. 

கோவாக்சின் தடுப்பூசி முன்பு ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.200 குறைக்கப்பட்டு ரூ.400-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலை நேற்று (ஏப்.29) ரூ.100 குறைக்கப்பட்ட நிலையில், இன்று கோவாக்சின் தடுப்பூசி விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசியின் விலை  அண்மையில் உயர்த்தப்பட்டது.

இதற்கு பல்வேறு மாநிலங்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில், தற்போது தடுப்பூசிகளின் விலை அடுத்தடுத்து குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில், தனியார் மருத்துவமனைகளுக்கு ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட விலையான ரூ.1,200-ல் மாற்றமில்லை எனவும் பாரத் பயோடெக் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


 

newstm.in

Tags:    

Similar News