நாக்கை அறுத்துவிடுவோம்.. பெட்ரோல் விலையை ஏற்றிய முட்டாள்தான் குறைக்க வேண்டும்.. காட்டமாக பதிலளித்த முதலமைச்சர் !!
நாக்கை அறுத்துவிடுவோம்.. பெட்ரோல் விலையை ஏற்றிய முட்டாள்தான் குறைக்க வேண்டும்.. காட்டமாக பதிலளித்த முதலமைச்சர் !!
தெலங்கானாவில் தற்போது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பேச்சு விவகாரம். ஆனால் அவரது பேச்சை ஆளும் கட்சியினர் ஆதரித்து வருகின்றனர்.
அதாவது, தெலுங்கானா விவசாயிகளிடம் இருந்து விவசாய விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதை பாஜக உறுதி செய்யும் என மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் தெரிவித்திருக்கிறார். இதற்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் சந்திரசேகர ராவ், இது முற்றிலும் பொய்யானது. மத்திய அரசு நெல்-ஐ வாங்கப்போவதில்லை என தெரிவித்துள்ளது.
அதனால்தான், விவசாயிகளின் நஷ்டத்தைத் தடுக்க வேறு பயிர்களை பயிரிடும் படி மத்திய அரசு பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறது என்றார்.
மேலும், ஏற்கெனவே மத்திய அரசு நெல்லை வாங்க மாட்டோம் என கூறியிருக்கிறது. ஆனால் மாநில பாஜக தலைவர் சஞ்சை விவசாயிகளிடம் நெல் பயிரிடுமாறும், அதை மத்திய அரசு வாங்கிக்கொள்ளும் எனவும் கூறி பொய்யை பரப்பி வருகிறார். இப்படி தேவையற்ற முறையில் பேசிக்கொண்டிருந்தால் உங்கள் நாக்கை அறுப்போம் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், மேலும், பா.ஜ.கவினர் காரை ஏற்றி விவசாயிகளை கொலை செய்கிறீர்கள். பா.ஜ.க முதல்வர் ஒருவர் விவசாயிகளை அடித்துக்கொல்லுமாறு கூறியிருக்கிறார். விவசாயிகளின் உணர்வுகளுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். தெலங்கானா ராஷ்டிரிய சமிதி விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தும்.
இந்தியாவின் ஜிடிபி பாகிஸ்தான், பங்களாதேஷை விட குறைவாக உள்ளது. ஆனால், மத்திய அரசு தேவையற்ற வரிகளை மக்கள் மீது சுமத்துகிறது. நீங்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சத்தை கொடுத்துவிட்டீர்களா? 2 கோடி வேலைவாய்ப்புகளை கொடுத்து உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீர்களா? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் தலா ரூ.5, ரூ.10ஐ மத்திய அரசு குறைத்தது. இதேபோல், மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது.
இதற்கு பதிலளித்து பேசிய அவர், நாங்கள் பெட்ரோலுக்கான வாட் வரியை உயர்த்தவில்லை. ஒரு பைசா கூட உயர்த்தவில்லை என்பதால் வரி குறைப்பு என்ற கேள்வி எழாது. டிஆர்எஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து வாட் வரி உயர்த்தப்படவில்லை. எந்த முட்டாள் நம்மிடம் (VAT) குறைக்கச் சொல்வான்? இதனை அதிகப்படுத்திய முட்டாள் தான் அதை குறைக்க வேண்டும், என்று கடுமையாக விமர்சித்தார்.
newstm.in