நளினி, முருகன் இருவரும் 30 நாட்கள் பரோல் கேட்டு ஸ்டாலினுக்கு கடிதம்!

நளினி, முருகன் இருவரும் 30 நாட்கள் பரோல் கேட்டு ஸ்டாலினுக்கு கடிதம்!

Update: 2021-05-27 11:28 GMT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருபவர் நளினி மற்றும் முருகன். ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்ட 7 தமிழர்களில் நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரின் தூக்குத் தண்டனை கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பே ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டு விட்ட நிலையில், மீதமுள்ள மூவரின் தூக்கு தண்டனையும் கடந்த 2014-ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி குறைக்கப்பட்டது. 

அதற்கு அடுத்த நாள் தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்து 110 விதியின்கீழ் அறிவிப்பு வெளியிட்ட அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்திருப்பதாகவும், இதுகுறித்த தனது கருத்தை மத்திய அரசு 3 நாட்களுக்குள் தெரிவிக்காவிட்டால் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவித்தார். 

அடுத்த சில நாட்களில் 7 தமிழர்களின் விடுதலையை எதிர்த்து அப்போதைய மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அப்போது என்ன நிலைமை இருந்ததோ அதே நிலை தான் இப்போதும் நீடிக்கிறது. 7 தமிழர்கள் விடுதலை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் துளி கூட முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் ஆகியோர் தனித்தனியாக வேலூர் மத்திய ஜெயில் சூப்பிரண்டு ருக்குமணி பிரியதர்ஷினியிடம் 30 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.இதில் நளினி சென்னையில் உள்ள தனது தாயார் பத்மா முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் அருகில் இருந்து கவனித்து கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் இலங்கை நாட்டில் வசித்த தனது மாமனாரும், முருகனின் தந்தையுமான வெற்றிவேல் இறந்து ஓராண்டு ஆகி இருப்பதால் அவருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்யவும் எனக்கும், கணவர் முருகனுக்கும் 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முருகனின் தந்தை வெற்றிவேல் கடந்தாண்டு இறந்தபோது இறுதிசடங்கு செய்வதற்காக பரோலில் செல்ல அனுமதி கேட்டும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News