நீருக்கு அடியில் லிப்லாக்.. வைரலாகும் நடிகையின் கர்ப்ப கால ஃபோட்டோ ஷூட் !!

நீருக்கு அடியில் லிப்லாக்.. வைரலாகும் நடிகையின் கர்ப்ப கால ஃபோட்டோ ஷூட் !!

Update: 2021-11-14 19:55 GMT

பிரபல நடன இயக்குனர் சின்னாவின் மகளான நடிகை ஜெனிஃபர், நந்திதா என்ற பெயரில் ஹீரோயினாக சில தமிழ் படங்களில் நடித்தார். பாரதி ராஜாவின் ஈரநிலம், ராவண தேசம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

பிறகு பட வாய்ப்புக்கள் குறைந்ததால், பார்த்திபன் கனவு உள்ளிட்ட பல படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து ஐட்டம் சாங்கிற்க நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அதற்கு பிறகு 2007 ல் கேமிராமேன் காசி விஸ்வநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆனார். நடிக்கவும் இல்லை ஆடவும் இல்லை.

ஆனால், 2013ஆம் ஆண்டு சினிமாவில் தனது 2ஆவது இன்னிங்ஸை தொடங்கினார். ஆனால் இந்த முறை தனது உண்மையான பெயரான ஜெனிஃபர் என்ற பெயருடன் சில படங்களில் நடித்தார். தொடர்ந்து சில சீரியல்களிலும் நடித்தார். விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியலில் ராதிகா கேரக்டரில் நடித்த பிறகு மிகவும் பிரபலமானார் ஜெனிஃபர். இவரின் சாந்தமாக முகம், அலட்டல் இல்லாத நடிப்பு பலரையும் கவர்ந்தது.

இந்நிலையில் சமீபத்தில் பாக்யலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக ஜெனிஃபர் அறிவித்தார். தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதால், சீரியலில் இருந்து விலகுவதாக அவரே அதற்கு விளக்கமும் அளித்தார். ஜெனிஃபர் விலகியதை அடுத்து அவருக்கு பதில் ரேஷ்மா பசுபலாட்டி, ராதிகா கேரக்டரில் மாற்றப்பட்டு தற்போது நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து கர்ப்ப கால புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ஜெனிஃபர். இந்நிலையில் கர்ப்பகாலத்தில் தண்ணீருக்கு அடியில் தனது கணவருடன் அழகிய ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார். தண்ணீருக்கு அடியில் லிப்லாக் முத்தம் கொடுத்தபடி கணவன் – மனைவி எடுத்துக் கொண்ட புகைப்படம் செம வைரலாகி வருகிறது.

newstm.in

Tags:    

Similar News