தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி நடன இயக்குனராக வலம் வருபவர் சாண்டி மாஸ்டர்.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர். இறுதிப் போட்டி வரை சென்று ரன்னராக வெற்றி பெற்றார். இவரது மனைவி சில்வியா. சாண்டி - சில்வியா தம்பதியருக்கு சூசன்னா என்ற பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் சாண்டியின் மனைவி சில்வியா கர்ப்பமாக இருக்கும் தகவல் வெளியனது. வளைகாப்பு நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. அதில், ரோபோ சங்கர், ரியோ ராஜ் உள்ளிட்ட விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நேற்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சாண்டி குழந்தையின் பிஞ்சு கைகளின் வீடியோவுடன், எங்கள் ராஜா பிறந்து விட்டான் என பகிர்ந்துள்ளார்.