நேரலையில் செய்தியாளரிடம் துப்பாக்கி முனையில் வழிப்பறி.. திகில் கிளப்பும் வீடியோ !!

நேரலையில் செய்தியாளரிடம் துப்பாக்கி முனையில் வழிப்பறி.. திகில் கிளப்பும் வீடியோ !!

Update: 2021-02-22 11:00 GMT

தென் அமெரிக்காவின் ஈக்வடார் பகுதியில் கடந்த 19ஆம் தேதி தனியார் செய்தி ஊடகத்தின் செய்தியாளர் ஒருவர் விறுவிறுப்பாக நேரலை செய்துக்கொண்டிருந்தார். அப்போது செய்தியாளரை நெருங்கிய இளைஞர் ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து மிரட்டினார்.

நேரலை என்று கூட பார்க்காமல் அந்த கொள்ளையன் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்போது, செய்தியாளர் மற்றும்  குழுவினரிடம் இருந்த பணத்தை தன்னிடம் ஒப்படைக்கக் வேண்டும் என துப்பாக்கி காட்டி மிரட்டிய காட்சிகள் பதிவாகியுள்ளன. 

பின்னர் விசாரணையில், ஈக்வடார் ஸ்போர்ட்ஸ் பத்திரிகையாளர் டியாகோ ஓர்டினோலா (Diego Ordinola) என்பவர் குவாயாகில் நகரில் உள்ள Estadio Monumental கட்டிடத்திற்கு வெளியில் இருந்து DirecTV ஸ்போர்ட்ஸிற்காக செய்திகளை நேரலையில் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு முகமூடி அணிந்து வந்த கொள்ளையர் செய்தியாளரின் முகத்தில் ரிவால்வரை காட்டி தொலைபேசியை தருமாறு மிரட்டினார். பின்னர் அந்த நபர் தனது துப்பாக்கியை கேமராமேன் மற்றும் குழுவினரிடையே காட்டி, அவர்களிடம் இருக்கும் பணம் மற்றும் தொலைபேசிகளை ஒப்படைக்குமாறு மிரட்டியுள்ளார். பின்னர் அக்குழுவில் இருந்த ஒருவரிடம் இருந்து மொபைல் போனை பிடிங்கிவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார்.


இவை அனைத்தும் கேமராவில் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வீடியோவை பத்திரிகையாளர் டியாகோ ஓர்டினோலா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பின்னர் இது தொடர்பான புகாரில் நேரலையில் செய்தியாளர்களிடம் கொள்ளையடித்த கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். 

newstm.in
 

Tags:    

Similar News