கலகலக்கும் ஒலிம்பிக்.. டோக்கியோவில் ஒரே நாளில் 2,848 பேர் கொரோனாவால் பாதிப்பு !
கலகலக்கும் ஒலிம்பிக்.. டோக்கியோவில் ஒரே நாளில் 2,848 பேர் கொரோனாவால் பாதிப்பு !
ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நாட்டு வீரர்களும் சுறுசுறுப்பாக பங்கேற்று பதக்கங்களை குவித்த வருகின்றனர். அதேநேரத்தில் டோக்கியோ நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு அவசரகால நிலைமை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
டோக்கியோ நகரில் இன்று ஒரே நாளில் 2,848 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. இது தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஜப்பானிய தலைநகரில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிக எண்ணிக்கையில் பதிவாகி உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி சம்பந்தப்பட்டவர்கள் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களில் 4 பேர் விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களில் 2 பேர் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியுள்ளனர். இது நகரத்தின் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
ஒலிம்பிக் போட்டிகளுக்காக சரியான தடை விதிகள் இருந்தபோதிலும், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிறர் சம்பந்தப்பட்ட 155 பாதிப்புகள் பதிவாகி உள்ளன. எனினும் எவ்வித தடையும் இன்றி ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
newstm.in