உலகம் முழுவதுமே கடந்த இரு வருடங்களாக கொரோனா கோர தாண்டவமாடி வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று நோயால் தற்போதுள்ள காலகட்டத்தில் மேலும் அவசரப்படுத்தப்படும் மோசமான போக்கில் தொழிலாளர்கள் நீண்ட நேரம் வேலை செய்யும் போக்கினால் வருடத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கிறார்கள். இந்த அதிக நேரம் வேலைச் செய்யும் போக்கு லட்சக்கணக்கான மக்களைக் கொல்கிறது என்று உலக சுகாதார அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. 


நீண்ட வேலை நேரங்களுடன் தொடர்புடைய உயிர் இழப்பு குறித்த முதல் உலகளாவிய ஆய்வில், சுற்றுச்சூழல் சர்வதேச இதழில் வெளிவந்த ஆய்வறிக்கையின் படி கடந்த 2016ம் ஆண்டில் நீண்ட வேலை நேரத்துடன் தொடர்புடையவர்கள்  பக்கவாதம் மற்றும் இதய நோயால் மட்டுமே சுமார் 7,45,000 பேர் உயிரிழந்துள்ளதைச் சுட்டிக் காட்டியது.
இது கடந்த 2000ம் வருடத்தை ஒப்பிடுகையில், கிட்டத்தட்ட 30 சதவிகிதம் அதிகரிப்பு ஆகும்.



வாரத்திற்கு 55 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமான நேரம் வேலை செய்வது கடுமையான உடல்நலக் கேட்டினைக் கொண்டு வரும் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் மரியா நீரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து WHO மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தயாரித்த கூட்டு ஆய்வில், பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 72 சதவிகிதத்தினர் ஆண்கள் மற்றும் நடுத்தர வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது. 

தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் வாழும் மக்கள், குறிப்பாக சீனா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய பகுதிகளில் இது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் இது காட்டுகிறது.

ஒட்டுமொத்தமாக ஒரு வாரத்தில் 55 மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட நேரங்களுக்கு வேலை செய்வது 35 சதவிகித தொழிலாளர்களில் அதிகமான அளவு பக்கவாதத்தினால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு இதய நோயால் தாக்கப்பட்டு இறக்கும் சதவிகிதம் 17 சதவிகிதத்திற்கு அதிக ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

இந்த ஆய்வு 2000-2016 காலகட்டத்தை உள்ளடக்கியது, எனவே COVID-19 தொற்றுநோயையும் சேர்க்கவில்லை, ஆனால் WHO அதிகாரிகள் தொலைதூர வேலைகளில் அதிகரிப்பு மற்றும் கொரோனா வைரஸ் அவசரநிலையின் விளைவாக உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஆகியவை காரணங்களாக இந்த அபாயங்கள் அதிகரித்திருக்கலாம் என்றும் கூறியுள்ளது.

கொரோனா தொற்றுநோய் காரணமாக  அதிகரித்த வேலை நேரத்தை நோக்கிய போக்கை வளர்க்கக்கூடிய முன்னேற்றங்களை துரிதப்படுத்துகிறது என்று WHO கூறியுள்ளது. 
WHO ஊழியர்கள், அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் உட்பட, அவர்கள் தொற்றுநோய்களின் போது நீண்ட நேரம் பணியாற்றி வருவதாகவும், ஆய்வின் வெளிச்சத்தில் ஐ.நா. நிறுவனம் தனது கொள்கையை மேம்படுத்த முற்படுவதாகவும் நீரா கூறியுள்ளார்.
 

Tags: